ஓலைக் கொட்டகையில் வியாபாரம் செய்தவர்களுக்கு புதியகடை.
களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைத் தொகுதியில் இதுவரைகாலமும், ஒலைக் கொட்டில்களில் தமது சிறு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த விபாகாரிகளின் நலன்கருதி அதில் வியாபாரம் செய்யும் 40 வியாபாரிகளினதும், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினரும், சமூக சேவையாளருமான, மேகசுந்தரம் வினோராஜின் சொந்த நிதியையும் பயன்படுத்தி புதிதாக கடைத் தொகுதி ஒன்று அமைக்கப்பட்டு அவை திங்கட்கிழமை (13) உத்தியோக பூர்வமாகத் திறந்து வைத்து உரிய வியாபாரிகளிடம் கையளிக்கப்பட்டன.
இதுவரை காலமும் நாம் ஓலைக் கொட்டகைக்குள் மழை வெள்ளத்தில் நனைந்து, நனைந்து எமது வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டோம், தற்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் மே.வினோராஜின் முயற்சியினால் நாம் தற்போது ஓரளவேனும் எமது வியாபார நடவடிக்கைகளை நிம்மதியாக மேற்கொள்ள முடிகின்றது. இதற்கு ஒத்தாசை புரிந்த வினோராஜிக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
எனது இச்செயற்பாட்டின் மூலம் நேரடியாக 40 குடும்பங்கள் இதன்மூலம் வியாபாரம் செய்து அவர்களது வாழ்வாதாரத்தை ஈட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோன்று நான் எதிர்காலத்தில் எனது சமூக சேவைகளை தொடர்ந்து முன்னெடுக்க காத்திருக்கின்றேன். என இதன்போது பிரதே சபை உறுப்பினர் மே.வினோராஜ் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிராம பெரியொர்கள், வர்த்தகர்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment