சாந்தலிங்கம் டிலுக்சியின் பல்கலைக் கழகக் கற்றலுக்கு கைகொடுத்துள்ள மறத்தமிழர் கட்சி.
மறத்தமிழர் கட்சியின் புதிய ஆண்டின் நிகழ்வாக வெளியாகியுள்ள உர்தர பெறுபேற்றின்படி கலைப்பிரிவில் 3ஏ சித்தியடைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 வது நிலையை பெற்றும் பெருமை சேர்த்த மாணவியின் பல்கலைக்கழக படிப்பு முற்றுப்பெறும்வரை கல்விச் செலவை மறத்தமிழர் கட்சி பொறுப்பேற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட
தமிழர்களின் ஆதிக்குடியினர் வாழும் கரடியன்குளம் கிராமத்தில் சாந்தலிங்கம் டிலுக்சி, என்ற மாணவி கலைப்பிரிவில் 3ஏ பெற்று சித்தியடைந்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 5வது நிலையையும் அவர் பெற்று பெருமை சேர்த்துள்ள இந்த மாணவிக்கு மறத்தமிழர்கட்சி உதவித்திட்டம் ஊடாக ரூபாய் 15000 ஐ உடன் வழங்கி வைத்ததோடு, அந்த மாணவியின் கல்விச் செலவை அவர் பல்கலைக் கழககத்தில் கற்று முடியும்வரை மறத்தமிழர் கட்சி உதவித்திட்டம் ஊடாக வழங்கும் என மறத்தமிழர் கட்சி மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ம.ஜெயக்கொடி அவர்கள் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட மாணவி எந்தவித பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்லாது 3ஏ பெறு பெற்று சித்தியடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment