7 Jan 2020

சுரவணையடியூற்று கிராமத்தில் “சபிரி கமக” கிராமிய அபிவிருத்தி திட்டம் பற்றிய ஆய்வு.

SHARE
(சுரவணையூர் தவா)

சுரவணையடியூற்று கிராமத்தில் “சபிரி கமக” கிராமிய அபிவிருத்தி திட்டம் பற்றிய ஆய்வு. 
ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவின் “நாட்டை கட்டியெழுப்பும் சௌபாக்கியமான நோக்கு” எனும் கொள்கை திட்டத்திற்கு அமைவாக கிராமிய அபிவிருத்தியின் ஊடாக “சபிரி கமக” (நிறைவானதோர் கிராமம்) சுற்று நிருபத்திற்கு அமைய மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  சுரவணையடியூற்று கிராமத்தில் சபிரி கமக திட்டத்தினூடாக மேற்கொள்ளவிருக்கும் வேலைத்திட்டத்தை மக்களுடன் கலந்துரையாடி. தெரிவு செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.

சுரவணையடியூற்று கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில், அப்பகுதி  அபிவிருத்தி உத்தியோஸ்த்தர் பி.புவனேந்திரனின் தலைமையில்  இந்நிழ்வு இடம்பெற்றது.

இதன்போது கிராமியமட்ட அமைப்புகள் உள்ளடங்கலாக கிராமிய சமூகக் குழு ஒன்று தெரிவு செய்யப்பட்டது. அமைக்கப்பட்ட அக்குழு மற்றும், பொது மக்களின் ஆலோசனைக்கு அமைவாக “சபிரி கமக” திட்டத்தின்கீழ்  சுரவணைடியூற்று விநாயகர் வீதி கொங்றீட் இடுவதற்கு முன்னுரிமைப் படுத்தப்பட்டதன் அடிப்படையில் அதனைப் புணரமைப்புச் செய்வது என தெரிவு செய்யப்பட்டுள்ளது. இத் திட்டம் மிகவிரைவில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் தழிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் போரதீவு பற்றுப் பிரதேச அமைப்பாளர் எஸ்.தயானந்தன், கிராம சேவகர், கிராமமட்ட பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.





SHARE

Author: verified_user

0 Comments: