25 Jan 2020

சுவாமி விவேகானந்தரின் ஜனனதினத்தை முன்னிட்டு வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும்.

SHARE
சுவாமி விவேகானந்தரின் ஜனனதினத்தை முன்னிட்டு வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும்.  
மட்டக்களப்பு மாவட்டம் புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தா தொழில் நுட்பக் கல்லூரியினால் ஏற்பாடு செய்யப்பட்ட அதார புருஷர் சுவாமி விவேகானந்தரின் ஜனனதினத்தை முன்னிட்டு வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும்  நிகழ்வு வெள்ளிக்கிழமை (24) கிராங்குளத்தில் அமைந்துள்ள சீ மூன் விடுதியில் நடைபெற்றது. 

இதன்போது மிகவும் பின்தங்கிய பிரதேச பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 50 இற்கும் மேற்பட்ட மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், க.பொ.த உயர்தர பரீட்சை எழுத்தி சித்தியடைந்த மாவவர்களும் கௌரவிக்கப்பட்டனர். 

இந்நிலையில் மாணவி ஒருவரின் குடும்ப சூழ்நிலை காரணமாக போக்குவரத்துக்கு சிரமம் காரணமாக, படிப்பினை இறைநிறுத்துவதற்கு ஆயத்தமான வேளையில் அம்மாணவிக்கும் இதன்போது துவிச்சக்கர வண்டி ஒன்றும் வழங்கப்பட்டன.

வே.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷஜானந்த ஜீ மகராஜ் அவர்கள் ஆத்மீக அதிதியாக கலந்து கொண்துடன், மட்டக்களக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர். இதன்போது ஆத்மீக உரைகளும், சிறப்பு உரைகளும் இடம்பெற்றன.















SHARE

Author: verified_user

0 Comments: