1 Jan 2020

கல்வியில் சிறந்து விளங்கினால்தான் எமது சமூகத்தை நாம் சிறந்த முறையில் வழிநடத்தலாம் - பிரதேச சபை உறுப்பினர் வினோராஜ்.

SHARE
கல்வியில் சிறந்து விளங்கினால்தான் எமது சமூகத்தை நாம் சிறந்த முறையில் வழிநடத்தலாம் - பிரதேச சபை உறுப்பினர் வினோராஜ்.
தமிழ் சமூகம் கல்வியில் சிறந்து விளங்கினால்தான் எதிர்காலத்தில் நமது சமூகத்iதைச் நல்ல முறையில் வழிநடாத்திச் செல்லலாம். இப்பிரதேசத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்கள் கல்வி கற்பதற்கு எதுவித தடைகள் வந்தாலும், அவற்றைத் தீர்த்து வைப்பதற்கு நான் முன்வருகினக்றேன். என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினரும், சமூக சேவையாளருமான மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்துள்ளார்.

புதுவருட ஆரம்ப திகத்தன்று (01.01.2020) படுவாங்கரைப் பகுதியிலிருந்து பின்தங்கி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்து விட்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

மாணவர்கள் எதுவித தடைகள் வந்தாலும் எக்காரணம் கொண்டும் கல்வியை இடை நடுவில் விட்டு விடக்கூடாது. வறுமையின் காரணமாக ஏழை மாணவர்களின் கற்றலுக்கு உதவுவதற்கு பலர் உள்ளார்கள். அவ்வாறானவர்களை இனம்கண்டு மாணவர்களின் கற்றலுக்குத் தேவையன உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

அரசாங்க பதவி நிலை உத்தியோகங்களுக்கும், சிறந்த அரசியல் முன்னெடுப்பக்களுக்கும் கல்வியை சிறந்த முறையில் கற்றுக் கொண்டால்தான் அது சாத்தியமாகும். எனவே மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்று இம்மாவட்டத்தில் கல்விமான்களான மிழிர இப்புதிய வருடத்தில் உறுதி பூணவேண்டும் என அவர் இதன்போது கேட்டுக் கொண்டார்.











SHARE

Author: verified_user

0 Comments: