மட்டக்களப்புகல்முனை வீதியில் குருக்கள்மடம் வியாழக்கிழமை 23.01.2020 அதிகாலை இடம்பெற்ற
வீதி விபத்தினால் மின்கம்பம் உடைந்து வீழ்ந்ததில் பிரதேசத்திற்கான மின் விநியோகம் திடீரெனதுண்டிக்கப்பட்டது.சம்பவம்பற்றிமேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் இருந்து திருக்கோவில் சென்று கொண்டிருந்த பஸ் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அதிகாலை 4 மணியளவில் குருக்கள்மடம் ஐயனார் கோயிலுக்குமுன்னால் வீதி மருங்கிலிருந்த மின்கம்பத்தில் மோதுண்டுள்ளது.மின்கம்பம் இரண்டாக முறிந்து பஸ்ஸில் வீழ்ந்துள்ள போதும் தெய்வாதீனமாக பஸ்ஸிருந்தபயணிகளுக்கோ வீதியில் பயணித்தவர்களுக்கோ எதுவித உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை எனகாத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
ஆயினும்பஸ்ஸ{க்குச் சேதமேற்பட்டதோடு களுவாஞ்சிக்குடி மின் விநியோகப் பிரதேசத்தில் மின்சாரம்உடனடியாக துண்டிப்புக்குள்ளானது.இச்சம்பவம்பற்றிகாத்தான்குடி போக்குவரத்துப் பொலிஸார்மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment