7 Jan 2020

கற்றலுக்கு இன்னலுற்ற மாணவிக்கு அக்னிச் சிறகுகள் பேரவையின் உதவிக்கரம்.

SHARE
கற்றலுக்கு இன்னலுற்ற மாணவிக்கு அக்னிச் சிறகுகள் பேரவையின் உதவிக்கரம்.
அக்னிச் சிறகுகள் பேரவையினரின் வழிகாட்டலில், நண்பர்கள் நற்பணி மன்றத்தின்(கட்டார்)நிதி பங்களிப்பில் கற்றலுக்கு தேவையான பொருட்களை வழங்கி வைத்துள்ளனர்.

வறுமையை ஒழிப்போம், கரம் கொடுப்போம், என்ற சிந்தனையில் வவுணதீவு பிரதேசத்தின் கரவெட்டி கிராம சேவையாளர் பிரிவிற்கு உட்பட்ட விளாமுனை கிராமத்தில் உள்ள மிகவும் வறுமைக்கோட்டில் கீழ் வாழும் யோகராசா யோதிகா என்ற ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவிக்கு அக்னிச் சிறகுகள் பேரவையினரின் வழிகாட்டலில், நண்பர்கள் நற்பணி மன்றத்தின்(கட்டார்) நிதி பங்களிப்பில் கற்றலுக்கு தேவையான அனைத்துப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் அம்மாணவியின் குடும்பத்திற்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்களும், அக்னிச் சிறகுகள் பேரவை தலை ஒருங்கிணைப்பாளர் ம.ஜெயக்கொடி தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன. 


இதன்போது அமைப்பி அமைப்பின் உறுப்பினர் கி.கேதீஸ், ஆலோசகர் க.காந்தன், உள்ளிடோர் கலந்துகொண்டனர், இதற்காக நிதியுதவி வழங்கிய நண்பர்கள் நற்பணி மன்றத்தினருக்கு(கட்டார்) மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக அக்னிச் சிறகுகள் பேரவை தெரிவித்துள்ளது.


SHARE

Author: verified_user

0 Comments: