28 Jan 2020

கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் இல்ல விளையாட்டுப் போட்டி.

SHARE
கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் இல்ல விளையாட்டுப் போட்டி.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் திங்கடட்கிழமை (27)  இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகள் வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.

ஒலிம்பிக் தீபம் ஏற்றுதலுடன் ஆரம்பமான போட்டியில், அணிநடை, உடற்பயிற்சிகண்காட்சி, அஞ்ல் ஓட்டம், குறுந்தூர ஓட்டம், வினோத உடைபோட்டி போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 

இல்லங்கள் சோடனை செய்யப்பட்டு நடைபெற்ற இப்போட்டியில், கம்பர், வள்ளுவர் என இரு இல்லங்களாக மாணவர்கள் பிரிக்கப்பட்டிருந்தனர். இதில் வள்ளுவர் இல்லம் மெய்வல்லுனர் போட்டிகளில் அதிக புள்ளிகளைப் பெற்று முதலிடத்தினைப் பெற்றது.

இதன்போது, வெற்றியீட்டிய மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களும், சிறந்த விளையாட்டு வீரர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

வித்தியாலய அதிபர் சா.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறீதரன், மண்முனை தென்மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம், வலய கணக்களார் ஆர்.சிவகுமார், உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சந்திரகுமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.










SHARE

Author: verified_user

0 Comments: