20 Jan 2020

மில்லேனியம் சலேன்ச் ஒத்துழைப்பு ஒப்பந்தம் விழிப்புணர்வு கருத்தரங்கு.

SHARE
மில்லேனியம் சலேன்ச் ஒத்துழைப்பு ஒப்பந்தம் விழிப்புணர்வு கருத்தரங்கு.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராகத் தொடங்கி தற்போது வரை விவாதப் பொருளாகியுள்ள மில்லேனியம் சலேன்ச் ஒத்துழைப்பு ஒப்பந்தம் சம்பந்தமான விழிப்புணர்வுக் கருத்தரங்கு (Millennium Challenge Corporation - MCC)  வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை 19.01.2020 இடம்பெற்றது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் கே.லவகுசராசா தலையில் கொழும்பு கற்றலுக்கும் கலந்துரையாடலுக்குமான எக்குமெனிக்கல் நிறுவனத்தில் (Ecumenical Institute for Study and Dialog)  இடம்பெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள செயற்பாட்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலில் மில்லேனியம் சலேன்ச் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் வரைவும் அதன் உள்ளடக்கங்களும் அதன் மூலம் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் ஏற்படக் கூடிய விளைவுகள் பற்றி விழப்புணர்வூட்டல் இடம்பெற்றது.
அத்தோடு சர்வதேச அரங்கில் ஏற்கெனவே இவ்வாறான அமெரிக்க அரசாங்கத்தின் ஒப்பந்தங்களை அமுல்படுத்தும் நாடுகளில் ஏற்பட்டுள்ள விளைவுகளும் கலந்துரையாடப்பட்டன.





SHARE

Author: verified_user

0 Comments: