பட்டிப்பளையில் பொது அமைப்புக்களுடன் சந்திப்பு.
பட்டிப்பளை பிரதேசத்திற்குட்பட்ட மகிழடித்தீவில் பொது அமைப்புக்களுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் வியாழக்கிழமை (16) சந்தித்து கலந்துரையாடியள்ளனர். இச்சந்திப்பின்போது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் உளள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்த்தர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் பிரதேச அமைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது உள்ளுர் அமைப்புக்களான கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம், விளையாட்டுக் கழகங்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் பொது நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு எதிர்கால அரசியலில் தமது பங்களிப்பு பற்றியும் தமது கிராமங்களின் நலன் தொடர்பாகவும் கலந்துரையாடினர்.
இக்கலந்துரையாடல் சுமுகமாக அமைந்ததுடன் எதிர்காலத்தில் தமது கிராமத்தின் நலனுக்காக எமது கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் கலந்துகொண்டோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment