20 Jan 2020

மட்டக்களப்பில் பல்வேறுவகைப் பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு வாழ்வாதார உதவி.

SHARE
மட்டக்களப்பில் பல்வேறுவகைப் பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு வாழ்வாதார உதவி.
பல்வேறு வகைப்பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு வாழ்வாதார வசதியளிக்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உதவியளிக்கப்பட்டு வருவதாக முனைப்பு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இலங்கைக் கிளைத் தலைவர் எம். சசிகுமார் தெரிவித்தார்.

வாழ்வாதாரம், கல்வி, போக்குவரத்து அம்சங்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை 19.01.2020 மட்டக்களப்பில் இடம்பெற்றது.

அந்நிகழ்வில் பல்வேறுவகைப் பாதிப்புக்களுக்கு உள்ளாகிய நிலையில் தமது ஜீவனோபாயத்திற்காக அல்லற்படும் குடும்பங்களுக்கு சுமார் 4 இலட்ச ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகளும், கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு போக்குவரத்து வசதியில்லாமல் சிரமப்படும் வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார், முனைப்பு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இலங்கைக் கிளைத் தலைவர் எம். சசிகுமார்,  நிறைவேற்றுப் பணிப்பாளர் மாணிக்கம் குமாரசாமி, செயலாளர் ஆர். குகநாதன் உள்ளிட்டோரும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.






SHARE

Author: verified_user

0 Comments: