மட்டக்களப்பில் சிங்களத் தாய்மொழிப் பொலிஸாருக்கும் படையினருக்கும் தமிழ் மொழி டிப்ளோமா கற்கை.
மட்டக்களப்பு பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் சிங்களத்தை தாய் மொழியாகக் கொண்ட பொலிஸாருக்கும் படையினருக்கும் தமிழ் மொழி டிப்ளோமா பயிற்சி ஆரம்ப நிகழ்வு திங்கட்கிழமை 06.01.2020 இடம்பெற்றது.
மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள பொலிஸ் பயிற்சிக்கல்லூரியினால் நடாத்தப்பட்டு வரும் இரண்டாம் மொழி தமிழ் கற்கை நெறியின் 2020ஆம் ஆண்டுக்கான 5 மாதகால டிப்ளோமா பயிற்சி நெறி இதுவென அதிகாரிகள் தெரிவித்தனர்.
இப்பயிற்சிநெறியில் நாடளாவிய ரீதியில் இருந்து தமிழ் மொழி டிப்ளோமா கற்கை நெறிக்காக விரும்பி விண்ணப்பித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், விஷேட அதிரடிப்படையினர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் பயிற்சி கல்லூரியின் பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி ஏ.டி. ரஹீம் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் கல்லூரி, அரலஹங்வில பொலிஸ் கல்லூரி ஆகியவற்றின் பொறுப்பதிகாரியான பொலிஸ் அத்தியட்சகர் கே.டி. சந்திரபால கலந்து கொண்டு பயிற்சி நெறிகளை ஆரம்பித்து வைத்தார்.
கூடவே இந்த துவக்க நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம் என். மெண்டிஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
0 Comments:
Post a Comment