(சுரவணையூர் தவா)
சுரவணையடியூற்றில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்டட சுரவணையடியூற்று கிராமத்தில் வறிய குடும்பத்தைச் சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்க நான்கு பிள்ளைகளின் தந்தையான நல்லதம்பி வீரப்பா என்பவர் திங்கட்கிமை (13) சடலாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தானர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…
ஞாயிற்றுக்கிழமை இரவு அவரின் அயலவரின் வீட்டின் வாசலில் நின்ற மரத்தின் கீழ் உறங்கிய நிலையில் திங்கட்கிழமை காலை அவர் நித்திரை விட்டு எழுந்திருக்கவில்லை, அவரை அருகில் சென்று எழுப்பியபோது அவர் உயிரிழந்திருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டார்.
மரணம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு வருகைதந்த திடீர் மரண விசாரணை அதிகாரி சண்முகநாதன் கணேஸதாஸினால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு சடலம் மேலதிக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்வவம் தொடர்பாக மேலதி விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment