9 Jan 2020

மட்டக்களப்பு - வவுணதீவில் மாகாண கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தின் மனையியல் டிப்ளோம் பயிற்சியை நிறைவுசெய்த யுவதிகளின் உற்பத்திப் பொருட் கண்காட்சி நடைபெற்றது.

SHARE
மட்டக்களப்பு - வவுணதீவில்  மாகாண கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தின்  மனையியல் டிப்ளோம்  பயிற்சியை நிறைவுசெய்த யுவதிகளின் உற்பத்திப் பொருட் கண்காட்சி  நடைபெற்றது.
மட்டக்களப்பு, மண்முனை மேற்கு - வவுணதீவு பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கும், கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்கள மாதர் அபிவிருத்திப் பயிற்சி நிலையத்தால் நடாத்தப்பட்ட மனையியல் டிப்ளோம் தொழிற்பயிற்சியை நிறைவுசெய்த யுவதிகளின் உற்பத்திப் பொருட் கண்காட்சியும் விற்பனையும், வவுணதீவு மாதர் அபிவிருத்திப் பயிற்சி நிலையத்தில்,  செவ்வாய்கிழமை 7ம் திகதி நடைபெற்றது.

கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.அரசகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்,  கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர் என்.தனஞ்செயன், பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், கணக்காளர் வி.வேல்ராஜசேகரம்,திட்டமிடல் பணிப்பாளர் ரி. நிர்மலராஜ்,  மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மோகன் பிரேம்குமார் நிருவாக உத்தியோகத்தர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கடந்த 2019ம் ஆண்டில் தையல், ஐசிங்கேக், கைப்பணிப் பொருட்கள், ஆடை அலங்காரம் போன்றவை தொடர்பான ஒரு வருட டிப்ளோமா பயிற்சி நெறியை நிறைவுசெய்த யுவதிகளே, இக்கண்காட்சியிலும் விற்பனை நிகழ்விலும் ஈடுபட்டனர்.

இதன்போது பயிற்சியை நிறைவு செய்த 20 யுவதிகளுக்கு அவர்களின் பங்களிப்பு ஊடாக தையல் 20 இயந்திரங்களும், பழமரக் மரக்கன்றுகளும்  வழங்கிவைக்கப்பட்டது.

மாதர் அபிவிருத்தி பயிற்சிகள் நகர் பகுதிகளை விட கிராமப் பகுதிகளுக்குத்தான் அதிகம் தேவைப்படுகின்றது எனவும்.

கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களிலும் மூன்று கணணி பயிற்சி நிலையங்களை அமைக்கவுள்ளதாகவும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர் என்.தனஞ்செயன் தெரிவித்தார். 










SHARE

Author: verified_user

0 Comments: