நாற்பதுவட்டையில் வைத்திய முகாம்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட நாற்பதுவட்டையில் ஞாயிற்றுக்கிழமை (08) வைத்திய முகாம் இடம்பெற்றது.
மகிழடித்தீவு வைத்தியசாலையினால் உக்டா நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இவ்வைத்திய முகாம் ஒழுங்குசெய்யப்பட்டு நடாத்தப்பட்டது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்கள், வைத்திய பரிசோதனைகளை பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்ட நிலையில் இவ்வைத்திய முகாம் குறித்த கிராமத்தில் நடாத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது, தாந்தாமலை, மக்களடியூற்று, ரெட்வாணா, நாற்பதுவட்டை போன்ற பல இடங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் வருகைதந்து சிகிச்சைப் பெற்றுச் சென்றனர்.
மகிழடித்தீவு வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ரி.தவநேசன் தலைமையிலான வைத்தியசாலை ஊழியர்களினால் வைத்தியப்பரிசோதனை நடாத்தப்பட்டது.
0 Comments:
Post a Comment