மட்டக்களப்புமெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல்.
சனிக்கிழமைமாலை 07.00 மணிமுதல், மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் மெதடிஸ்த மத்தியகல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் தலைவர் வி.தர்சன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்லூரியின் அதிபரும் பழையமாணவர் சங்க ஆலோசகருமான ஆர்.பாஸ்கரன் உட்பட கல்லூரியின் பிரதி அதிபர், பழைய மாணவர்கள் விசேடமாக சிரேஸ்ட பழையமாணவர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.கல்லூரிபழைய மாணவர்களின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வில் கல்லூரியின் முன்னால் அதிபரும், முன்னாள்பாராளுமன்ற உறுப்பினருமான பிரின்ஸ் காசிநாதரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு இதேவேளைகல்லூரியின் அபிவிருத்தி நடவடிக்கையில் செயல்பட்ட பழைய மாணவர்களின் செயல்பாடுகள்தொடர்பான காணொளிகள் காட்சிப்படுத்தப்பட்டன. அதை தொடர்ந்து 75 வயதைத் தாண்டிய பழையமாணவர்களை வரவேற்கப்பட்டதுடன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமைகுறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment