மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏறாவூர் பிரதேசத்தின் கிராமங்களான சித்தாண்டி-04, மாவடிவேம்பு-01,மாவடிவேம்பு-02, வாந்தாறுமூலை, ஒருமுச்சோலை,களுவங்கேணி,ஆகிய கிராமங்களில் வெள்ள அனர்த்த பாதிப்புக்களை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஷ்வரன் நேரடியாக சென்று பார்வையீட்டார்.
மாவடிவேம்பு விக்கினேஷ்வரர் வித்தியாலயத்தின் இடைத்தல்கல் மூகாமில்லுள்ள 70 குடும்பங்களுக்கு பாய்கள்,சிறுவர்களுக்கான பொருட்களையும் சித்தாண்டி சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள (இடைதங்கல் முகாம்) 50குடும்பங்களுக்கும், சித்தாண்டி இராமகிஷ்ண மிசன் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ள (இடைதங்கல் முகாம்)14 குடும்பங்களுக்கும் பாய் உதவிகளை வழங்கிவைத்தார்.
இவ்வுதவிகள் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஷ்வரன் அவர்களின் வேண்டுதலில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஊடாக அகில இலங்கை இந்து மன்றத்தால் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கோரளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசன் மற்றும் இந்து இளைஞர் பேரவை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
0 Comments:
Post a Comment