அடிப்படை மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு ஒன்று செவ்வாய்கிழமை (17) மட்டக்களப்பு அன்புக்கும் நட்புக்குமான இளைஞர் வலையமைப்பு (AFRIEL) எனும் அரச சார்பற்ற நிறுவனத்தின் காரியாலத்தில் நடைபெற்றது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட சுமார் 30 இற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்து கொண்னர். இதில் மனித உரிமை ஆணைக்குழுவில் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர்; ஏ.சிஅப்துல் அஸீஸ் அவர்கள் கலந்து கொண்டு அடிப்படை மனித உரிமைகள், அவை மீறப்படும் போது அதனை எவ்வகையான சட்டங்களைக் கொண்டு அணுகுதல் தொடர்பாகவும், பல்வேறு பட்டவிளக்கங்களை வழங்கினார்.
இதில் அன்புக்கும் நட்புக்குமான இளைஞர் வலையமைப்பு (AFRIEL) நிறுவனத்தின் இணைப்பாளர்கள், தொண்டர்கள், உத்தியோகஸ்த்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment