வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக்கிளை உதவிவருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக்கிளை பெரிதும் உதவி வருவதாக அதன் தலைவர் த.வசந்தராசா திங்கட்கிழமை (09) தெரிவித்தார்.
வெள்ளத்தினால் பாதிப்புற்று அவதியுறும் பறங்கியமடு, தேவபுரம், சித்தாண்டி, முள்ளிவெட்டுவான் போன்ற பல பகுதிக்கும் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் தொண்டர்கள் சகிதம் சேரில் சென்று அவ்வவ் கிராமங்களுகளில், பார்வையிட்ட செஞ்சிலுவைக் குழுவினர், அவர்களின் நிலமையினைக் கவனத்திலெடுத்து உதவிகளை வழங்கியுள்ளர்.
அந்த வகையில் பறங்கியமடு கிராமத்தில் பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள், தேவபுரம் கிராமத்தில் பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள், சித்தாண்டிக் கிராமத்தில் பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களுக்கு ஆடைகள், வெட்சீட், பாய், சறம், நீர் எடுக்கும் கலன்கள், முள்ளிவெட்டுவான் கிராமத்திலிருந்து பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு பாய், தேங்காய், அரிசி, மற்றும் ஆஞ்சநேயர் கிராமத்திலிருந்த பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களுக்கு பாய், மற்றும் உடுதுணிகளும் திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் எப்பாகத்திலாவது வெள்ளத்தினால் பாதிப்புற்ற கிராமங்களுக்கு தாம் நேரடியாக விஜயம் செய்து நிலமையினைப் பார்வையிட்டு தமது சேவையை மேற்கொள்வுள்ளதாக இலங்கைச் செஞ்சிவுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் தலைவர் த.வசந்தராசா மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment