வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறத்தமிழர் கட்சியினால் நிவாரணசேவைகள் முன்னெடுப்பு.
மட்டக்களப்பு மாவட்டம் ஆறுமுகத்தான் குடியிருப்பு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை மறத்தமிழர் கட்சி மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ம.ஜெயக்கொடி, ஊடகத்துறை பொறுப்பாளர் ச.ராஜுசுதன், மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தொடர்பாளர் மு.வசந்தன் கணணித்துறை பொறுப்பாளர் நவநீதன் மற்றும் ரமேஸ், மகளீர் அணி பொறுப்பாளர்கள் உதயகுமார் றஞ்சினி, பஞ்சலிங்கம் புண்ணியவதி, மற்றும் முக்கிய உறுப்பினர்களும் வெள்ளிக்கிழமை (13) நேரில் சென்று பார்வையிட்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து, இதன்போது நிவாரணப் பொருட்களை மக்களுக்கு வழங்கி வைத்தனர்.
மறத்தமிழர் கட்சி மனிதநேய பணிகளில் ஈடுபடும் கட்சியாகவும், மக்கள் மத்தியில் வளர்ந்து வரும் கட்சியாகவும், தென்படுகின்றது. இன்றைய காலச்சூழலில் எமது இனத்தின் எதிர்காலம் இன்றைய இளைய தலைமுறையினரின் தோள்களிலே கட்டாயமாக சுமத்தப்பட்டுள்ளது. எனவே எமது மக்களை இறுகச் சுற்றி இருக்கும் வறுமை எனும் சங்கிலியை உடைத்தெறிந்து, பொருளாதார ரீதியில் கட்டி எழுப்பிட இளைஞர்கள் அறவழியிலே அரசியல் பாதையை தேர்ந்தெடுத்து மக்களுக்கு தோளோடு தோள் நின்று உழைத்திட முன்வர வேண்டும் எனவும் மறத்தமிழர் கட்சியினுடைய தலைமை ஒருங்கிணைப்பாளர் வே.அன்பழகன் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment