9 Dec 2019

அரசாங்க அதிபர் வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவிற்கு விஜயம் செய்து வெள்ள அனர்த்த நிலமையைப் பார்வையிட்டார்.

SHARE

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவிற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் வெள்ள அனர்த்தத்தை பார்வையிடுவதற்காக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ஏ.சி.எம்.சியாத் தலைமையிலான அதிகாரிகள் குழு வேற்றுக்சேனை கிராம சேவகர் பிரிவினை விசேடமாக பார்வையிட்டனர்.வெள்ள அனர்த்தத்தின் போது வேற்றுச்சேனை கிராமம் ஆனது கடிமையான வெள்ளப்பாதிப்பினை எதிர்கொண்ட பிரதேசமாகையால் அங்கு வயல் நிலங்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாக்கப்பட்டதையும் அங்கு வாழ்கின்ற மக்கள் அரச அதிபரிடம் முறையிட்டனர். அண்ணளவாக 346 ஏக்கர் வயல் நிலங்கள் அழிவுற்றுக்காணப்படுவதையும்   அங்கு செய்யப்பட்ட சேனைப்பயிற்செய்கைளும் அழிவடைந்த நிலையிலே காணப்பட்டது.

அப்பிரதேசத்தில் வசிக்கின்ற மக்களின் பிரதான தொழில்லாகிய விவசாயம்,கால் நடை வளர்ப்பு ஆகிய 2 பிரதான தொழில்களுமே அதிகமாய் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ளது.இந்த வகையிலே பாதிக்கப்பட்ட விவசாய கால்நடை பண்ணையாளர்களுக்கு அரசினால் நிவாரணம் அல்லது நஷ்ட ஈடுகள் வழங்குவதற்கு மக்கள் அரச அதிபரை கோரியிருந்தனர்.










SHARE

Author: verified_user

0 Comments: