கடுக்காமுனை குளத்தின் வான்கதவுகளும் திறப்பு.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரை மழைகாரணமாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கடுக்காமுனை குளத்தின் வான்கதவுகள் புதன்கிழமை (11) திறக்கப்பட்டன.
குறித்த குளத்தின் நீர்மட்டம் அதிகரித்தமையினால் இந்நான்கு வான்கதவுகளும் ஒரு அடிக்கு திறந்துவிடப்பட்டுள்ளன. இதனால் கடுக்காமுனை பாலத்தின்மேல் நீர் பாய்ந்தோடுகின்றமையினால் இவ்வீதியின் ஊடாக பயணிப்பவர்கள் அவதானமாக பயணிக்குமாறும் கூறப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் செவ்வாய்கிழமை (10) மாலையில் இருந்து புதன்கிழமை (11) காலை வரை பெய்த அடைமழையின் காரணமாக பிரதேசத்திற்குட்பட்ட பல குறுக்குவீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அவ்வீதிகளை அண்டிய வீடுகளிலும் நீர்தேங்கி நிற்கின்றன.
வெள்ளநீரை வெளியேற்றுவதற்காக கிராமங்களில் உள்ள வீதிகளிற்கு அருகில் வாய்க்கால்கள் வெட்டிவிடப்பட்டப்பட்டுள்ளன. இதேவேளை கொங்கிறீட் வீதிகளின் குறுக்காக நீர் வடிந்தோடுவதற்காக அதன்மூடிகள் திறந்துவிடவும்பட்டுள்ளன. இதனால் கிராமங்களில் உள்ள வீதிகளில் பயணிப்பவர்கள் அவதானமாக பயணிக்க வேண்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment