கடின பந்து கிரிக்கெற் வலைப் பயிற்சி மையம் திறந்து வைப்பு.
மட்டக்களப்பு கோட்டைமுனை கழத்தால் கடின பந்து கிரிக்கெற் வலைப் பயிற்சி மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழத்தின் பலம்பெயர் அங்கத்தவர்களின் உதவியால் இப்புதிய கடினப் பந்து கிரிக்கெற் வலைப் பயிற்சி மையம் திறந்து வைக்கப்பட்டதாக விளையாட்டு கழகத்தினர் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடின பந்து கிரிக்கெற் விளையாட்டினை மேலும் ஊக்குவிக்கும் முகமாக இந்த பயிற்சி மையம் அமைக்கப்பட்டதாக கோட்டைமுனை கழகத்தினர் மேலும் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு சிற்றி லக்கி விளையாட்டு கழகத்தின் மைதானத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது.
திங்களன்று 23.12.2019 இடம்பெற்ற இந்நிகழ்வில், கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் மூத்த உறுப்பினரும் கழகத்தின் முன்னாள் பயிற்றுவிப்பாளருமாகிய மல்கம் டிலிமா, அக்கழத்தின் புலம்பெயர்ந்து வாழும் பிரதிநிதி பி.வசீகரன், விளையாட்டு கிராமத்தின் தவைலர் ஆர்.சிவநாதன், செயலாளர் எஸ்.அருள்மொழி, சிற்றிலக்கி விளையாட்டு கழகத்தின் தலைவர் ஏ.மகேந்திரராசா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment