மட்டக்களப்பு மாவட்டத்தில்
க.பொ.த.சா தர சாதாரணதர பரீட்சை அமைதியான முறையில் ஆரம்பம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில்
நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் இம்முறை கல்விப்பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை மாவட்டத்தில் 5 கல்வி வலயங்க ளிலிருந்து 25191 பேர் தோற்றுகின்றனர் இதற்காக 160 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இணைப்பு பரிட்சை நிலையங்கள்14ம் அமைக்கப் பட்டள்ளன. இதில் பாடசாலை பரீட்சாத்திகள்
10189 பேரும் தனியார் பரீட்சாத்திகள் 15002 பேரும் இம்முறை பரீட்சைக்காக தோற்றுகின்றனர் .பரீட்சை நிலையங்களில் அமைதியான் முறையில் பரீட்சைகளை நடாத்த வேண்டிய நடவடிக்கைகளை கல்வி அமைச்சு முன்னெடுத்துள்ளது.
சகல பரீட்சை நிலையங்களில் கையடக்க தொலைபேசி எடுத்து செல்லல் தடை செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக பரிட்சை மேற்பார்வையானர்கள் கடமைக்கு நியமிக்கப்பட்டுள்ளதுடன் பிற கல்வி வலயங்களில் பணியாற்றும்
அதிகாரிகள் இம்முறை நகர பாடசாலைகளுக்கு கடமைகளுக்காக
அமர்த்தப்பட்டுள்ளனர். இதேவேளை
க.பொ.த.சா தர பரிட்சைக்கு தோற்றும் மாணவர்கள; இன்று தமது பெற்றொர் சகிதம் ஆலயத்திற்கு வந்து தாம்சிறப்பாக பரீட்கைளில் திறமைகளை பெற வேண்டி இடம்பெற்ற பூ ஜைகளில் கலந்து கொண்டதுடன் பெற்றோரின் ஆசிர்வாதங்களை
பெற்றுக்கொண்டதுடன் மாணவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிலித்து க்கொண்டதுடன் உற்சாகமாக இன்று காலை சமய பாட பரீட்சைக்கு சமுகமளித்தனர். மாவட்டத்தின்
05 கல்வி வலயங்களிலும்
இன்று காலை அமைதியான முறையில் பரீட்சை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.
0 Comments:
Post a Comment