தாய்நாட்டை அழகாக மாற்றுவோம் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் களுவாஞ்சிகுடி நகரில் மாபெரும் சிரமதானம் முன்னெடுப்பு.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் தாய்நாட்டை தாய்நாட்டை அழகாக மாற்றுவோம் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் களுவாஞ்சிகுடி நகரில் களுவாஞ்சிகுடிப் பொலிசாரின் ஏற்பாட்டில் மாபெரும் சிரமதானப்பணி ஒன்று ஞாயிற்றுக்கிழமை (01) முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது களுவாஞ்சிகுடி பொலிசார், முச்சக்கரவ்டிச் சங்கத்தினர், வர்த்தகசங்கம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை, களுவாஞ்சிகுடி பிரதேச பொது சுகாதார பிரிவினர். களுவாஞ்சிகுடி மெக்ஸ் விளையாட்டுக்கழகத்தினர், மற்றும் சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த சிரமதானத்தை முன்னெடுத்திருந்தனர்.
இச்சிரமதானப் பணியின்போது நுளம்பு பெருகும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றைத் துப்பரவு செய்ததுடன், தேங்கிக்கிடந்த கழிவுகள், மற்றும், குப்பை கூழங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டன.
இச்சிரமதானப் பணியில் களுவாஞ்சிகுடிப் பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.டி.எம்.பாறுக், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.டி.யு.ஐ.குணவர்த்தன, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் ஞா.யோகநாதன், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment