24 Dec 2019

குப்பைமேடாக அமையும் மண்முனை துறை.

SHARE
குப்பைமேடாக அமையும் மண்முனை துறை.

மண்முனை தென்மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மண்முனைப் பாலத்திற்கு அருகில் இனந்தெரியாதோரல் குப்பைகள் கொட்டப்பட்டப்படுவதால் குறித்த பகுதி குப்பைமேடாக மாறிவருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மண்முனை பாலத்திற்கு அருகில் வீட்டுக்கழிவுகள், வர்த்தக நிலைய கழிவுகள், பிளாஸ்ரிப் பொருட்கள் என்பன இனந்தெரியாதோரால் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் குறித்த கழிவுகள் நீரினால் அடித்துச்செல்லப்பட்டு ஆற்றிலும் கலக்கின்றமையுடன், அழுகிய நிலையில் துர்நாற்றமும் வீசுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

பிளாஸ்ரிக் பொருட்களில் நீர்தேங்கி நின்று நுளம்பு பெருகுவதற்கான சாத்தியமும் உள்ளது. தொடர்ச்சியாக இப்பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்ற நிலையிலும் பிரதேசசபையினர் இதுதொடர்பில் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையெனவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

குறித்த மண்முனைத்துறைப்பாலத்தினை பார்வையிடுவதற்காக அன்றாடம் பல்வேறு நபர்கள் வந்துசெல்கின்ற நிலையிலும், குறித்த பகுதி குப்பைமேடாக மாறிவருகின்றமை கவலையளிப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பில், உரிய நடவடிக்கைகளை பிரதேசசபையினர் மேற்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.





SHARE

Author: verified_user

0 Comments: