மண்முனைப்பற்று பிரதேச இலக்கிய விழா.
மண்முனைப்பற்று பிரதேச செயலகம், கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் பிரதேச கலாசார அதிகார சபை இணைந்து நடாத்திய பிரதேச இலக்கிய விழா சனிக்கிழமை (30) தாழங்குடா றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் செ.யோகராசா, சிறப்பு அதிதியாக மண்முனைப்பற்று தபால் அதிபர் திருமதி வி.லோகேஸ்வரராஜா, கௌரவ அதிதிகளாக தாழங்குடா விநாயகர் மகா வித்தியாலய அதிபர் சா.மதிசுதன், சமாதான நீதவான் காசிப்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது “புதிய மழைத்தூறல்-ஐஐஐ” எனும் நூல் வெளியிடப்பட்டது. இந்நூலுக்கான நயவுரையினை திருமதி.ரதி தனஞ்செயன் வழங்கியிருந்தார். நாட்டார் கலையில் எடுத்துக் காட்டாக விளங்கும் மனோன்மணி செல்வநாயகம் இதன்போது கௌரவிக்கப்பட்டதுடன் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் நிகழ்ச்சிகளில் பங்குபற்றியவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கிராமியக் கலையினை எழுச்சிபெறச் செய்யும் நோக்குடன் நிகழ்வில் பட்டிமன்றம், கூத்து, நாட்டார் பாடல்கள், நடன நிகழ்வுகள் என்பனவும் இதன்போது நிகழ்த்தப்பட்டன.
0 Comments:
Post a Comment