கிராங்குளம் கிராமத்தில் வருடாந்தம் வெள்ளத்தினால் பாதிப்புற்று நீர் தேங்கிநிற்கும் பகுதிக்கு வடிகான் அமைக்கப்படும் - யோகேஸ்வரன் எம்.பி.
மட்டக்களப்பு மாவட்டம் கிராங்குளம் மத்தி கிராமத்தின் பனையடிப் பள்ள வீதியில் வருடாந்தம் வெள்ளத்தினால் பாதிப்புற்று நீர் தேங்கிநிற்பதாகவும் இதனால் அப்பகுதியிலுள்ள மக்கள் வருடாந்தம் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருவதாகவும் எனது கவனத்திற்குக் கொண்டுவந்தனர். இதனை நான் இப்பகுதிக்கு வடிகான் அமைப்பது தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் முன்மொழியப்பட்டு மாவட்ட அரசாங்க அதிபருக்கும், அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கும் பரிந்துரை செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிராங்குளம் கிராமத்தில் வெள்ளத்தில் பாதிப்புற்ற மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (13) மாலை கிராங்குளத்தில் இடம்பெற்றது. இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கி வைத்துவிட்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்….
எதிர்காலத்தில் இப்பகுதியில் தேங்கிநிற்கும் நீரை வெளியேற்றுவதற்காக வேண்டி வடிகான் அமைக்கப்படும்போது அதற்கு இக்கிராம மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இப்பகுதி மக்கள் வருடாந்தம் மழைகாலத்தில் நீர் தேங்கி நின்று வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு வருவதனால் இப்பகுதியில் தேங்கும் மழைநிரை வரைவாக வழிந்தோடச் செய்யும் முகமாக வடிகான் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என அவர் இதன்போது தெரிவித்தார்.
அகில இலங்கை இந்து மா மன்றத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினூடாக இவ்உதவிவழங்கி வைக்கப்பட்ட இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் செயலாளர் சாமித்தம்பி மதிசுன், பொருளார் ந.புவனசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment