2 Dec 2019

கலாபூசணம் டாக்டர் மாசிலாமணி கந்தசாமி மட்டக்களப்பு மாவட்ட நீதிபரிபாலன பிரிவிற்கான சமாதான நீதிவானாக நீதியமைச்சினால் நியமிப்பு

SHARE

மட்டக்களப்பு கலைஞர் ஒன்றியத்தின் தலைவர் கலாபூசணம் டாக்டர் மாசிலாமணி கந்தசாமி மட்டக்களப்பு மாவட்ட நீதிபரிபாலன பிரிவிற்கான சமாதான நீதிவானாக நீதியமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
சமூக சேவையில் மிகுந்த ஈடுபாடுள்ள கோமியோபதி வைத்தியர் ஆன கலாபூசணம் கந்தசாமி இலக்கியம் ,பண்பாட்டு எழுத்துதுறை, நாட்டுக்கூத்து, சிற்பகலை துறைகளில் ஈடுபாடுள்ளவர்.

கொழும்பு இந்து பேரவையின் உப தலைவரான கலாபூசணம் கந்தசாமி மட்டக்களப்பு இந்துவிருத்தி சங்கத்தின் உபதலைவராகவும் மாவட்ட ஒன்றியத்தின் தலைவராகவும் மட்டக்களப்பு சின்ன ஊரணி மாவடிப்பிள்ளையார் ஆலயத்தலையவராகவும் மட்டக்களப்பு சின்ன ஊரணி திருநாவுக்கரசு திருப்பணி மன்றத்தின் தலைவராகவும் மட்டக்களப்பு ஓய்வூதிய சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவும் செயற்;பட்டுள்ளார்.


இவருக்கு சிற்பம் ,எழுத்துதுறை, சிறுகதை ,வரலாற்றுநாடகம் , நாட்டுக்கூத்து ,சமூகநாடகம் ,வானோலி கிராம சஞ்சிகை நிகழ்ச்சி போன்றவற்றின் பராம்பரிய கலைத்துறை செயற்பாடுகளுக்காக கலாபூசணம் விருதுவழங்கப்பட்டுள்ளது.
இவர் மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவராவர் என்பது குறிப்பிடத்தக்கது.





SHARE

Author: verified_user

0 Comments: