19 Dec 2019

கிழக்கில் முதலாவது பிராந்திய திறன்விருத்தி கலந்துரையாடல் மன்றம்.

SHARE
கிழக்கில் முதலாவது பிராந்திய திறன்விருத்தி கலந்துரையாடல் மன்றம்.
கிழக்குப் பல்கலைக்கழக  பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து முதன் முதல் ஒழங்குசெய்த பிராந்திய திறன் அபிவிருத்தி செயலமர்வு மன்றம் மட்டக்களப்பில்  புதன்கிழமை (18) நடைபெற்றது.

கிழக்குப் பல்கலைக்கழக பழைய பட்டதாரி மாணவர்களின் நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளரும் பொதுநிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உதவிப் பணிப்பாளருமான சி.தணிகசீலனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்

பல்கலைக்கழகத்தில் இருந்து பல திறன் அறிவுகளுடன் வெளியேறி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பணிபுரியும் எமது மாவட்ட பிராந்திய அனைத்துப் பல்கலைக்கழக பழைய பட்டதாரி மாணவர்களையும் எதிர்காலத்தில் ஒன்றிணைத்து எமது மாவட்ட மற்றும் பிராந்திய நலனுக்காக அவர்களது திறன், அறிவு, அனுபவங்களை ஏனைய நலிவுற்ற மக்களின் முன்னேற்றத்துக்காக பிரயோகப்படுத்துவதுடன் சிறந்த ஆழுமைப்பண்புள்ளவர்களை அடையாளங் கண்டு அவர்களுடைய தலைமைத்துவம் ஆழுமைகளை கட்டியெழுபுவதும் நீண்டகால நோக்கத்திற்கான திறன் விருத்தி கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட உயர் பதவிநிலை உத்தியோகஸ்த்தர்கள், பலர் கலந்த கொண்டு கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.  










SHARE

Author: verified_user

0 Comments: