அதிகாலையில் ஆயுதங்களைக் காட்டி வாகனங்களை அதிகாலையில் ஆயுதங்களைக் காட்டி வாகனங்களை வழிமறித்து திகிலூட்டும் திருட்டு 11 வாகனங்களை நிறுத்தி அதிலிருந்தி 182000 ரூபாய் பணம் கொள்ளை.
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் அதிகாலை வேளையில் ஆயுதங்களைக் காட்டி வழிப்பறிக் கொள்ளை இடம்பெற்றுள்ளதான முறைப்பாடு கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் பொலிஸாரின் தீவிர தேடுதல் தொடர்வதாக பொலிசார் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை 08.12.2019 அதிகாலை 3 மணியளவில் மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதி பெரியகல்லாறு ஆலையடிப் பகுதியில் இடம்பெற்றுள்ள இந்த வழிப்பறிக் கொள்ளைச் சம்பவத்தில் 11 பேரிடமிருந்து சுமார. 182000 ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
ஆயுதம் தரித்த இருவர் பிரதான வீதியில் நின்று கொண்டு, வீதியூடாக பயணித்தவர்களை வழிமறித்து, அவர்களிடம் இருந்த பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர்.
இவ்விதம் 11 வாகனங்கள் வழிப்பறியர்களால் மறிக்கப்பட்ட நிலையில் அவ்வாகனங்களிலிருந்த மீன்வியாபாரிகள், மரக்கறி வியாபாரிகள், ஏனைய தொழில்களுக்கு கையில் ரொக்கப் பணத்துடன் சென்றவர்களிடமிருந்து ஆயுதங்களைக் காட்டி மிரட்டி இத்துணிகர கொள்ளையடிப்பு இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் பொலிஸாரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதும் உஷாரடைந்த பொலிஸார் பொலிஸ் உயர்மட்ட உத்தரவுகளின் பேரில் தீவிர தேடுதல், கண்காணிப்பு, துப்பறியும் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்

0 Comments:
Post a Comment