4 Dec 2019

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நெல் வயல்கள் பற்றிய மதிப்பீடு இடம்பெறுகிறது

SHARE

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நெல் வயல்கள் பற்றிய மதிப்பீடு இடம்பெறுகிறது.மட்டக்களப்பில் சமீப சில நாட்களாகப் பெய்துவரும் கன மழையினால் நெல்வயல்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் பற்றிய மதிப்பீடுகள் இடம்பெற்று வருவதாக மட்டக்களப்பு விவசாய பிரதிப் பணிப்பாளர் விஸ்வநாதன் பேரின்பராஜா புதன்கிழமை 04..12.2019 தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை சுமார் 60 ஆயிரம் ஹெக்ரேயர் நிலப்பரப்பில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்து.

அவற்றில் இம்முறைப் பெரும்போகத்திற்காக தாழ் நிலப் பிரதேசங்களில் செய்கை பண்ணப்பட்ட வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

தொடர்ந்து வெள்ள நீர் அந்த தாழ்நில வயற் பிரதேசங்களில் தடைப்பட்டு தங்கி நிற்குமானால் நெற்பயிர்கள் அழிவடையக் கூடும்.

ஆயினும் இயல்பாகவே நெற்பயிர்கள் இரண்டொரு தினங்கள் நீரில் மூழ்கினாலும் நீர் வடியத் தொடங்கியவுடன் அவை வளரத் தொடங்கும்.

எவ்வாறாயினும் தொடர் மழையாலும் வெள்ளத்தினாலும் நெல் வயல்கள் தொடர்ச்சியாக பல தினங்களுக்கு வெள்ளத்தில் அமிழ்ந்திருந்தால் அவை அழிவடையக் கூடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போதைக்கு அழிவடைந்திருக்கும் நெல்வயல்கள் பற்றிய மதிப்பீடுகள் விவசாய அலுவலர்களால் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரை விவசாயப் பிரதேசமும் கிரான் விவசாயப் பிரதேசமும் வெள்ளத்தினால் கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கி;ன்றனர்.

சில குளங்களின் வான் கதவுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் திறந்து விடப்பட்டிருப்பதாலும் வான் கதவுகள் இல்லாத இன்னும் சில குளங்கள் நிரம்பி வழிவதாலும் நெல்வயல்கள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.







SHARE

Author: verified_user

0 Comments: