23 Dec 2019

துறைநீலாவணையில் முன்பள்ளி மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு.

SHARE
துறைநீலாவணையில் முன்பள்ளி மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு.
மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபையின் கீழ் இயங்கும் துறைநீலாவணை வடக்கு கண்ணகி சனசமூக நிலைய ஆங்கில மொழி மூலமான முன்பள்ளி மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு கடந்த வியாழக்கிழமை(19) துறைநீலாவணை மகாவித்தியாலயத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில்  சனசமூக நிலையத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான இ.சுதாகரன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஞா.யோகநாதன் பிரதம அதிதியாகவும். பிரதேச சபை உறுப்பினர் கா.சரவணமுத்து மற்றும் சனசமூகநிலைய உத்தியோகத்தர்.பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் இமாணவர்கள் இபெற்றோர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது மாணவர்களின் நடன நிகழ்வுகள் நடைபெற்றதுடன் முன்பள்ளி பாடசாலையிலிருந்து 2020 ஆம் கல்வி ஆண்டில் தரம் ஒன்றுக்கு இணைந்து கொள்ளவுள்ள மாணவர்கள் அதிதிகளினால் பதக்கம் அணிவித்து நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.



SHARE

Author: verified_user

0 Comments: