31 Dec 2019

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய மட்டத்தில் தெரிவான கைத்தொழில் முயற்சியாளர்களை கௌரவிக்கும் விசேட நிகழ்வு.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய மட்டத்தில்  தெரிவான கைத்தொழில் முயற்சியாளர்களை கௌரவிக்கும் விசேட நிகழ்வு. 
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய மட்டத்தில்  தெரிவான கைத்தொழில் முயற்சியாளர்களை கௌரவிக்கும் விசேட நிகழ்வு திங்கட்கிழமை (30) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரின் ஒன்றுகூடல் மண்டபத்தில்   நடைபெற்றது.

இலங்கை கைத்தொழில் அதிகார சபையினால் நடாத்தப்பட்ட மாவட்ட மட்ட கைத்தொழில் முயற்சியாளர்களை கௌரவிக்கும்  அதி சிறந்தவிருது வழங்கும் தேசிய நிகழ்வில்   மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவான எட்டுகைத்தொழில் முயற்சியாளர்களை கௌரவிக்கும் விசேட நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பிரதி பணிப்பாளர் பந்துல, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலாபுண்ணியமூர்த்தி, உதவிமாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன், கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பிரதி பணிப்பாளர் பந்துல உட்பட கைத்தொழில் முயற்ச்சியாளர்கள், புத்தாக்கவியலாளர்கள் மற்றும் சிறு கைத்தொழில் முயற்ச்சியாளர்கள் தேசியரீதியிலான  விருதினை பெற்றவர்கள் இன்று அரசஅதிபர் மாணிக்கம் உதயகுமார் அவர்கலால் விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

தேசிய மட்டத்தில்14 விருதுகள் மாவட்டத்திற்கு கிடைத்துள்ளது.;  நடைபெற்ற இவ்விருதுவிழாவில் எட்டு துறைகளில் மட்டக்களப்பு மாவட்டம் அதிகூடிய விருதுகளை பெற்றுகொண்டமை குறிப்பிடத்தக்கது தேசிய மற்றும் மாகாண மட்ட விருதுகளும் ,ரப்பர்,மற்றும் பிளாஸ்டிக் துறை ,காகிதாதி,மற்றும் காகிதாதி, கழிவுகள், அலுமீனிய கழிவுகள், இரசாயன கழிவுகள்கைத்தொழில், பைபர் கைத்தொழில், நெசவுகைத்தொழில், மரக்கைத்தொழில் ஆகிய எட்டு துறைகளுக்கே இந்தவிருதுகள் கிடைத்தன.

இங்குமாவட்ட அரசாங்க அதிபர் உதயகுமார் கருத்துரை  வழங்குகையில் அரச தொழில் வாய்ப்பை கூடுதலாக எதிர்நோக்கும் இந்த காலகட்டத்தில் தொழில் இல்லாத பிரச்சினைகளை தீர்த்துவைக்கும் வகையில்கூடுதலான தொழில்வாய்ப்பை வழங்கியும் அதிக விருதுகளை பெற்றுக்கொடுத்து மாவட்டத்துக்கு பெருமை சேர்த்த இம்மாவட்ட கைத்தொழில் முயற்சியாளர்களை பாராட்டுகின்றேன் என கூறினார்.

சிமடெக்ஸ் மற்றும் இனோடெக்ஸ் விருதுகளும் எமது மாவட்டத்திற்கு கிடைத்தமை பெருமைக்குரியதாகும். வேலையில்லாத வீதம் தேசிய மட்டத்தில் 4.1 வீதமாகவும் மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் 6.8 வீதமாகவும் காணப்படுகின்றது. இதனை கைத்தொழில் அபிவிருத்தி மூலமாக தேசியமட்டத்திற்கு கொண்டுவர வேண்டும் என அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தெரிவித்தார் 




SHARE

Author: verified_user

0 Comments: