இலங்கையில் சிங்கள மக்களுக்கு என்ன சலுகை கிடைக்கின்றதோ அதே விடையங்கள் தமிழ் மக்களுக்கும் கிடைக்கும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் - சந்திரகுமார்.
எமது ஜனாதிபதி கோட்டபாய ராஜக்கஸவின் தலைமையில் இலங்கையில் புதிய ஆட்சி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சியைப் பற்றி தமிழ் மக்களுக்கு அதிகளவு தப்பான அபிப்பிராயங்கள் இருந்தன. இனிவரும் காலங்களில் எமது மக்கள் அவ்வாறான தப்பான அபிப்பிராயங்களிலிருந்து விடுபட வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எமது ஜனாதிபதிக்கு தமிழ் மக்களில் பெரும்பாலானோர் வாக்களிக்கவில்லை. அவ்வாறு இருந்தும், இலங்கைளிலுள்ள அனைத்து மக்களையும் ஒரு தாயின் பிள்ளைகள்போல் பார்ப்பதாக எமது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். குறிப்பாக இலங்கையில் சிங்கள மக்களுக்கு என்ன சலுகை கிடைக்கின்றதோ அதே விடையங்கள் அனைத்தும், தமிழ் மக்களுக்கும் கிடைக்கும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
என ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெருமுனக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை (23) தேத்தாத்தீவு கிராமத்திற்கு விஜயம் செய்த அவர் அப்பகுதி மக்களைச் சந்தித்து கலந்துரையாடடினார். இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அதில் அவர் மேலும் குறிப்பிடுகையில்….
கடந்த ஆட்சியில் இருந்தவர்கள் இலஞ்சம் பெற்று, ஊழல் செய்ததனால் சலுகைகள் எமது மக்களில் சரியான நபர்களுக்குக் கிடைக்கவில்லை. இதனால் அதிகளவான எமது மக்களுக்கு அரசாங்கத்தின் சலுகைகள் அனுபவிப்பதற்குக் கிடைக்கவில்லை. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 23 விதமான முஸ்லிம் மக்களுக்குக் கிடைக்கின்ற சலுகைகள் இம்மாவட்டத்திலுள்ள 75 வீதமான தமிழ் மக்களுக்குக் கிடைப்பதில்லை. சரியான அரசியல் தலைமைத்துவம் இல்லாதனாலும், இருந்தவர்கள் சரியாக நடந்துகொள்ளாமையுமே இதற்குக் காரணமாகும்.
தற்போது மக்கள் மத்தியில் சில திட்டங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டதிலுள்ள 347 கிராம சேவையாளர் பிரிவுகளிலும், 17 பேர் கொண்ட குழுவை நியமித்து வருகின்றோம். அக்குழு அக்கிராமத்தில் பரிந்துரை செய்துயும் வேலைத் திட்டங்கைளத்தான் நாங்கள் எதிர்காலத்தில் நடைமுறைப் படுத்தவுள்ளோம்.
தற்போது ஒரு கிராமசேவைப் பிரிவுக்கு தலா இருபது லெட்சம் ரூபா வீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு பிரதேசத்திற்கு 350 பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் செயற்றிட்டமும் வந்துள்ளது. இத்தகைய தொழில்வாய்ப்பு எதிர்வரும் ஜனவரி மாத இறுதிக்குள் வழங்கப்படும். அதுபோல் சகல பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பு வழங்கவுள்ளோம். இதுபோன்று அதிகளவான செயற்றிட்டங்ககள் மேலும் அமுல்ப் படுத்தப்படவுள்ளன.
இனிவரும் 20 வருடங்களுக்கு எமது பொதுஜனப் பெருமுனக் கட்சியின் ஆட்சியை எவராலும் மாற்றமுடியாது. 5 வருடத்திற்குள் 35 இலெட்சம் பேருக்கு தொழில்வாய்ப்பு வழங்கப்படவுள்ளன. அதில் முதற்கட்டமாகத்தான் 3 மாதத்திற்குள் ஒரு இலெட்சம் பேருக்கு தெழில்வாய்ப்பு வழங்கப்படவுள்ளன. எமது சேவைகள் அனைததும் சரியான நபர்களுக்குப் போய் சேர வேண்டும் என்பதற்காகத்தான் உரிய கிராமங்களுக்கு நாங்கள் நேரடியாக விஜயம் செய்து மக்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றோம்.
6000 வீடுகளைக் கட்டுவதற்கு அனுமதி வந்துள்ளது குறிப்பாக ஒரு பிரதேச செயலாளர் பிரிவுக்கு 500 வீடுகள் கட்டப்படவுள்ளன. எனவே அபிவிருத்தி வெண்டும் என எமது மக்கள் நினைத்தால் தேசியம், தேசியம், என தொடர்ந்த கதைத்துக் கொண்டிருக்காமல் மக்கள் அபிவிருத்தியின்பால் பின்னின்று செயற்பட வேண்டும்.
இதுவரைகாலமும் எமது மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கதையைக் கேட்டு எதுவித முன்னேற்றமும் கிடைக்கவில்லை. மாறாக ஓட்டமாவடி, ஏறாவூர், காத்தான்குடி போன்ற இடங்கள் எவ்வாறு அபிவிருத்தியில் முன்னேறிக் காணப்படுகின்றன என்பதை எமது மக்கள் நன்கு உணர்ந்து செயற்பட வேண்டும். எனவே எமது தமிழ் மக்கள் யாருக்காவது வாக்களியுங்கள் அது உங்களது விருப்பமாகும். ஆனால் எமது ஆட்சியில் நம்பிக்கை வைத்துச் செயற்படுங்கள். எம்மால் வழங்கப்படும் சலுகைகளை சரியான முறையில் எடுத்துக் கொள்ளுங்கள். என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment