25 Dec 2019

மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் இடம்பெற்ற கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனை.

SHARE
மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் இடம்பெற்ற கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனை.
கிழக்கு மாகாணத்தில் ஜேசு பாலகனின் பிறப்பைக் குறிக்கும் கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனைகள் சகல கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பாக இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நள்ளிரவு ஆராதனை புளியந்தீவு இணைப்பேராலயத்தில் மட்டு அம்பாறை மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது. 


ஆயர் ஆலயபங்கு தாரர்களால் செவ்வாய்க்கிழமை (24) நள்ளிரவு 11.45 மணியளவில் அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நள்ளிரவு ஆராதனை ஆரம்பமானது.


ஜேசு பாலகன் இறை தூதர் தேவதைகளால் மறைமாவட்ட ஆயருடன் இணைந்து மாட்டுத் தொழுவத்தில் நள்ளிரவு 12 மணியளவில் அவரது பிறப்பைக் குறிக்கும் வருகையை எடுத்துக் காட்டும் வகையில் வைத்து வழிபாடுகள் இடம்பெற்றன. இங்கு நத்தார் கீதங்கள் ஆராதனைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து ஜேசு பாலகனின் பிறப்பைக் குறிக்கும் ஆசியரையை மறைமாவட்ட ஆயர் நிகழ்த்தினார். பின்னர் தேவநற்கருணை ஆராதனையும் திருப்பலியும் இங்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது.


இவ்வாலயத்தில் இடம்பெற்ற இவ் நள்ளிரவு வழிபாடுகளை மறைமாவட்ட ஆயருடன் இணைந்து மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை சீ.அன்னதாஸ் அடிகள் நள்ளிரவு ஆராதனைகளை நடாத்தி வைத்தனர். இதில் மட்டு நகரிலுள்ள பெருமளவிலான கிறிஸ்தவப் பொதுமக்கள் கலந்து கொண்டு இறையாசி பெற்றுச் சென்றனர். 


இங்கு அருட்தந்தையர்களால் நாட்டிற்கும் நிரந்தர சமாதானம் அமைதி நிலவ வேண்டி இங்கு விஷேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. பாதுகாப்பும் மிக பலப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.






SHARE

Author: verified_user

0 Comments: