15 Dec 2019

அக்னிச் சிறகுகள் பேரவையினால் புலமைப் பரிசில் பரீட்சையில் வெற்றியீட்டிய மாவணவர்கள் கௌரவிப்பு.

SHARE
அக்னிச் சிறகுகள் பேரவையினால் புலமைப் பரிசில் பரீட்சையில் வெற்றியீட்டிய மாவணவர்கள் கௌரவிப்பு.அக்னிச் சிறகுகள் பேரவையினால்  மட்.நாவற்காடு நாமகள் கனிஸ்ட வித்தியாலயத்தில் இருந்து இம்முறை தரம் 5 இல் புலமை பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும், 70 புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களும், பரிசுப்பொருட்களும்,  கற்றலுக்கு வேண்டிய பாடசாலை உபகரணங்கள் வழங்கி பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.  

இந்நிகழ்வில் அக்னிச் சிறகுகள் பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் ம.ஜெயக்கொடி கலந்துகொண்டு பரிசில்களை வழங்கி வைத்தார். இதற்காக அனுசரணை வழங்கிய நாவற்குடாவை சேர்ந்த எஸ்.மோகன் அவர்களுக்கு அக்கினிச் சிறகுகள் அமைப்பினரும், பாடசாலைச் சமூகமும் நன்றியைத் தெரிவித்துள்ளது.








SHARE

Author: verified_user

0 Comments: