23 Dec 2019

பலத்த மழையுன்கூடிய காற்றினால் பாடசாலை மீது விழுந்த மரம் வெட்டி அகற்றப்பட்டன.

SHARE
பலத்த மழையுன்கூடிய காற்றினால் பாடசாலை மீது விழுந்த மரம் வெட்டி அகற்றப்பட்டன.

அண்மையில் ஏற்பட்ட பலத்த மழையுன்கூடிய காற்றினால் மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புக் கல்வி வலயத்திற்குட்பட்ட தேத்தாத்தீவு சிவகலை வித்தியாலயத்தினுள்  நின்ற மிகப் பழமை வாய்ந்த வேப்பை மரம் அடியோடு முறிந்து பாடசாலைக் கட்டடங்களின் மேல் விழுந்துள்ளது.
சுமார் இருவாரங்களுக்கு மேலாக இவ்வாறு பாடசாலைக் கட்டடங்கள் மீது விழுந்து கிடைந்த மரத்தை திங்கட்கிழமை (23) அப்பகுதிக்கு விஜயம் செய்ய ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் நிலமையினை அவதானித்து அம்மரத்தை வெட்டி அப்புறப்படுத்துவதற்கு உடன் நடவடிக்கை எடுத்துள்ளார்.


பாடசாலைக் கட்டடங்கள் மீது இம்மரம் விழுந்துள்ளதனால் இரண்டு கட்டடங்கள் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். தமது பாடசாலையின் மீது விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்த ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமாருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.








SHARE

Author: verified_user

0 Comments: