மண்முனைப்பற்று பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம்.
டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாமும் எமது சுற்றுப்புறச் சூழலையும் பாதுகாத்துக் கொள்ளுவதற்கு மண்முனைப்பற்று பிரதேச செயலகமும், மண்முனைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும் இணைந்து சனிக்கிழமை(30) ஆரையம்பதி பகுதியில் பாரிய டெங்கு ஒழிப்பு சிரமதானத்தினையும் கள பரிசோதனையினையும் மேற்கொண்டிருந்தனர்.
மண்முனைப்பற்று பிதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களது தலைமையில் நடைபெற்ற களப் பரிசோதனையின் போது அதிகளவான வீடுகளில் டெங்கு நூளம்பு பெருகுவதற்கு ஏதுவான இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அவை உடனே இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இதன் போது பிரதேச செயலகத்தின் உதவிப்பிரதேச செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும், மண்முனைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் சுகாதார உத்தியோகத்தர்களும் , காத்தான்குடி பொலிஸ் நிலைய சுற்றுச் சூழல் பாதுகாப்பு பொலிஸ் அதிகாரிகளும், ஆரையம்பதி பிரதேச சபையின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு டெங்கு நூளம்பினை இல்லாதொழிக்கும் இச்செயற்திட்டத்தில் பிதேச மக்களுக்கான விழிப்புனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment