19 Dec 2019

தேர்தல் நேரங்களின் போது மக்களில் காட்டும் அக்கறை தேர்தல் முடிவுற்றபின் எந்த ஒரு கட்சிக்கும் மக்களில் அக்கறை இல்லை – ஜெயக்கொடி

SHARE
தேர்தல் நேரங்களின் போது மக்களில் காட்டும் அக்கறை தேர்தல் முடிவுற்றபின் எந்த ஒரு கட்சிக்கும் மக்களில் அக்கறை இல்லை – ஜெயக்கொடி.
வலிமையற்றவர்கள் நாம் ஆனாலும் எமது சக்திக்கு உட்பட்டு எமது மக்களின் துன்ப துயரங்களில் தொடர்ந்தும் தோளோடு தோள் கொடுத்து மறத்தமிழர் கட்சி நிற்போம். தேர்தல் நேரங்களின் போது மக்களில் காட்டும் அக்கறை தேர்தல் முடிவுற்றபின் எந்த ஒரு கட்சிக்கும் மக்களில் அக்கறை இல்லை. 

என மறத்தமிழர் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ம.ஜெயக்கொடி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடியில் உள்ள குமாரவேலியார் கிராமத்திற்கு உட்பட்ட அம்மன்புரம் கிராமங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 167 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் மறத்தமிழர் கட்சியினால் வழங்கி வைக்கப்பட்டது. இதில் மறத்தமிழர் கட்சியின் மத்திய குழு நிருவாகிகள் மகளீர் அணியினர்,மக்கள் தொடர்பாடல் பொறுப்பாளர் வசந்தன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ம.ஜெயக்கொடி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

இதன்போது கருத்து கொண்டு மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி வைத்து விட்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

அரசியல் என்பது மக்களின் தேவைகளைக்கண்டறிந்து அதை நிவர்த்தி செய்யும் சேவைதான் உண்மையான அரசியல். அந்த அடிப்படையில் மக்களோடு மக்களாக மக்களின் தேவைகளைக் கண்டறிந்து மறத்தமிழர் கட்சி ஊடாக தொடர்ந்து சேவைகளை மேற்கொள்ள  நாம் தயர்ராக உள்ளோம். 

வலிமையற்றவர்கள் நாம் ஆனாலும் எமது சக்திக்கு உட்பட்டு எமது மக்களின் துன்ப துயரங்களில் தொடர்ந்தும் தோளோடு தோள் கொடுத்து மறத்தமிழர் கட்சி நிற்போம். தேர்தல் நேரங்களின் போது மக்களில் காட்டும் அக்கறை தேர்தல் முடிவுற்றபின் எந்த ஒரு கட்சிக்கும் மக்களில் அக்கறை இல்லை. என அவர் இதன்போது குறிப்பிட்டார். 









    

SHARE

Author: verified_user

0 Comments: