16 Dec 2019

மட்டக்களப்பு மாவட்டம் திராய்மடு கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு தொகுதி மக்களுக்கு தேசிய மக்கள் முன்னேற்றம் அமைப்பினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் திராய்மடு கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு தொகுதி மக்களுக்கு தேசிய மக்கள் முன்னேற்றம் அமைப்பினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திராய்மடு கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேசிய மக்கள் முன்னேற்றம் அமைப்பினால்  ஞாயிற்றுக்கிழமை (15) மாலை உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

திராய்மடு சுவிஸ்கிராமம் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட  மழை வெள்ளத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு தொகுதி மக்களுக்கு இதன்போது மேற்படி தேசிய மக்கள் முன்னேற்றம் எனும் அமைப்பினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு தேசிய மக்கள் முன்னேற்றம் அமைப்பின் உறுப்பினர்களின் பங்களிப்புடன் மேற்படி நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இந்நிகழ்வில் கிராமமட்ட  அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும்  தேசிய மக்கள் முன்னேற்றம் அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பொருட்களை வழங்கி வைத்தனர்.





SHARE

Author: verified_user

0 Comments: