10 Dec 2019

மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்து முகாமையாளராக பொதுஜன பெரமுன இளைஞர் அணித் தலைவர் ஹரிபிரதாப் நியமனம்.

SHARE
மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்து முகாமையாளராக பொதுஜன பெரமுன இளைஞர் அணித் தலைவர் ஹரிபிரதாப் நியமனம்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான போக்குவரத்து முகாமையாளராக  பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணி தலைவர் தவபாலன் ஹரிபிரதாப் நியமிக்கப்பட்டுள்ளார்.

போக்குவரத்து முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் திலும் எஸ். அமுனுகமவினால் இந்நியமனம் ஞாயிற்றுக்கிழமை (08.12.2019) வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நியமனத்தை பெற்றுக்கொண்ட பின்னர்  ஹரிபிரதாப் கல்முனை விஹாராதிபதி சுமத்திர தேரரிடம் சென்று ஆசிகளை பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் கல்முனை பிரதேசத்திற்கான பொதுஜன பெரமுன கட்சி இளைஞர் அமைப்பின் அங்கத்தவர்களான ஜெகநாதன் கிஷாந்தன், ஆர்.சி. ரஜீவகுமார், ஏ. நிமலன் ஆகியோரும் உடனிருந்தனர்.



SHARE

Author: verified_user

0 Comments: