மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்ததினால் இதுவரை 42 வீடுகள் பகுதியளவிலும், ஒரு வீடு முற்றாகவும் சேதமடைந்துள்ளது. இச்சேத விபரங்களை அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.
வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் திருத்துவதற்காக வழங்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளர் எ.எஸ்.எம் சியாத் தெரிவித்தார்.
மேலும் அவ்வீடுகளை புணரமைப்பதற்காக மதீப்பீட்டு அறிக்கை கிடைத்ததும் அதற்கான நிதியினை விடுவிப்பதற்கு தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆயுத்தமாகவுள்ளது.
பாதிக்கப்பட்ட வீடுகளை அரசாங்க அதிபர் மா.உதயகுமார், வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரன், உதவி பிரதேச செயலாளர், அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எ.எஸ்.எம் சியாத் ஆகியோர் பார்வையிட்டனர்.
0 Comments:
Post a Comment