மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த 24 கைக்குண்டுகள் மீட்பு.
மட்டக்களப்பு காஞ்சிரம்குடா ஒதுக்குப் புறக் கிராமத்தில் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் 24 கைக்குண்டுகளை மீட்டுள்ளதாக கொக.;கட்டிச்சோலைப் பொலிஸார் தெரிவித்தனர்.
காஞ்சிரம்குடா வேக்கந்தசேனை வயல் பகுதியில் இக்குண்டுகள் சனிக்கிழமை 30.11.2019 விசேட அதிரடிப்படையினரின் வெடிகுண்டு பிரிவினரால்; மீட்கப்பட்டன.
அப்பகுதியிலுள்ள மண்மேடொன்றில் மண் அகழப்பட்ட நிலையில் இந்தக் குண்டுகள் வெளித்தோன்றியுள்ள விடயத்தை அறிந்து கொண்டு அப்பகுதியால் சென்ற கிராமத்தவர்கள் பொலிஸாருக்குத் தகவலை வழங்கியுள்ளனர்.
அதனையடுத்து அப்பகுதிக்குச் சென்ற விசேட அதிரடிப்படையினர் இந்தக் கைக்குண்டுகளை மீட்டுள்ளனர்.
இவை எல்ரீரீஈ இனரின் காலத்தில் அவர்களது புழக்கத்தில் கையாளப்பட்ட குண்டுகளாக இருக்கலாம் என்றும் தெரிவித்த பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment