மட்டக்களப்பில் 24 மணித்தியாலங்களில் அதிக மழைவீழ்ச்சி பதிவு - கிரானில் 80.3 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி.
மட்டக்களக்களப்பு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (10) வரையில் பரவலாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையில் தொடர்ந்து தழம்பல் நிலை ஏற்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. அந்தவகையில் மட்டக்களப்பு மவாட்த்தின் செவ்வாய்கிழமை காலை 8.30 மணியுடன் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி க.சூரியகுமார் தெரிவித்தார்.
இந்நிலையில் மட்டக்களப்பு நகரில் 43.1 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், நவகிரிப்பகுதியில் 8.5 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், தும்பங்கேணிப் பகுதியில் 32.0 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், மைலம்பாவெளிப் பகுதியில் 26.5 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், பாசிக்குடாப் பகுதியில் 51.4 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், உன்னிச்சைப் பகுதியில் 30.0 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், வாகனேரிப் பகுதியில் 4.3 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், கட்டுமுறிவுப் பகுதியில் 29.7 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், உறுகாமம் பகுதியில் 23.0 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், கிரான் பகுதியில் 80.3 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே மாவட்டத்திலுள்ள அனைத்து சிறிய குளங்களும் மழை நீரில் நிரம்பி வழிவதுடன், பெரிய குளங்களின் நீழ்மட்டம் உயர்ந்துள்ளதுடன், வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment