முனைக்காடு சாரதா வித்தியாலயத்தில் பரிசளிப்பு விழா
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு சாரதா வித்தியால பரிசளிப்பு விழா சனிக்கிழமை (23) இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் சு.ரவிசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாடசாலை ஆரம்பித்ததில் இருந்து தற்போதுவரை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்கள், 100 புள்ளிகளுக்கு பெற்ற மாணவர்கள், வகுப்பு ரீதியாக முதன்நிலை பெற்ற மாணவர்கள், பாடங்களில் தேர்ச்சி மட்டங்களை அடைந்த மாணவர்கள், அதிகூடிய நாட்கள் பாடசாலைக்கு சமுகமளித்த மாணவர்கள், இணைப்பாட விதான செயற்பாடுகளில் சாதனை படைத்தோர், விசேட திறமை கொண்ட மாணவர்கள், பாடசாலை செயற்பாடுகளில் ஆர்வத்துடன் செயற்படும் மாணவர்கள், பாடசாலை கழகங்களில் ஈடுபாடுடன் செயற்படும் மாணவர்கள் என பல மட்டங்களில் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும், பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 10 ஆண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், பாடசாலையின் பல்வேறு விடயங்களை கொண்ட பரிசளிப்பு விழா மலரும் இதன்போது வெளியீடு செய்யப்பட்டது.
மாணவர்களின் கலை நிகழ்வுகள் பலவும் நடைபெற்றமையுடன், நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறீதரன் மற்றும் கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், ஓய்வுபெற்ற உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி ரஞ்சிதமலர் கருணாநிதி, பிரதேச பாடசாலைகளின் ஆசிரியர்கள், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
பாடசாலையின் ஆசிரியர்களுக்கு இதன்போது பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமையுடன், மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளரும் மாலை பொன்னாடைப்போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
0 Comments:
Post a Comment