மகிழடித்தீவு வைத்தியசாலையின் பாதுகாவலர் மீது தாக்குதல்.
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையின் பாதுகாவலர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (03) இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளார்.
குறித்த வைத்தியசாலையின் முன்வாயிலில் கடமையில் இருந்த போதே பாதுகாவலர் தாக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலைக்குள் வருகைதந்த இனந்தெரியாத நபரே பாதுகாவலர் மீது கம்பியால் தாக்கியுள்ளார். சம்பவத்தில் காயமடைந்த பாதுகாவலர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment