மட்டக்களப்பிலும் வெற்றிக் களிப்பு.
இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ஷ தெரிவாகியுள்ளமையை அடுத்து மட்டக்களப்பு நகரை அண்டிய பிரதேசங்களில் பொதுஜன பெரமுன கட்சி அமைப்பாளர்களும் ஆதரவாளர்களும் உள்ளிட்டோர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இக் கொண்டாட்டத்தின்போது மட்டக்களப்பு மணிக்கூட்டுக் கோபுரத்தடி, மஞ்சந்தொடுவாய், கல்லடி, மத்திய வீதி, அரசடி சந்தி, ஊறணி போன்ற இடங்களில் ஞாயிற்றுக்கிழமை பட்டாசு கொளுத்தி வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
இதேவேளை, மட்டக்களப்பு மணிக்கூட்டுக் கோபுரத்தில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற கோட்டபாய ராஜபக்ஷ. எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ போன்றோரின் உருவப்படங்கள் நிறுவப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
0 Comments:
Post a Comment