காட்டு யானை கிராமத்தினுள் உட்புகுந்து பயன் தரும் தென்னை மரங்களை அழித்து விட்டுச் சென்றுள்ளது – தும்பங்கேயிணில் சம்பவம்.
மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பெருநிலப்பகுதியில் அமைந்துள்ள போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி இளைஞர் விவசாயத்திட்டம் எனும் கிராமத்தில் வெள்ளிக்கிழமை (01) அதிகாலை புகுந்த காட்டுயானை ஒன்று அக்கிராமத்திலிருந்த தென்னம் தோட்டம் ஒன்றை முன்றாக அழித்துள்ளது.
அதிகாலை ஒரு மணியளவில் புகுந்த காட்டுயானை சுமார் 40 வருடங்களாக இருந்து பயன்கொடுத்து வந்த தென்னைகளை முற்றாக அழித்துள்ளதுடன், மாமரங்களையும் உடைத்துச் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளது.
வெளியில் ஏதோ சத்தம் கேட்கின்றது என்பதை அவதானித்த குடும்பஸ்த்தினர் காட்டுயானை தமது தென்னைகளை உடைத்து அழிப்பதை அதவானித்துள்ளனர். பின்னர் கிராம மக்கள் அயலிலுள்ளவர்கள், அனைவரும் ஒன்றுகூடி பலத்த சத்தமிட்டும், பட்டாசு கொழுத்தியும், யானை அசையவில்லை, பின்னர் அதிகாலை 3 மணியளவில் யானையை ஒருவாறு தீப்பந்தம் ஏந்தியும், பலத்த பிரயத்தனத்தின் மத்தியில் பொது மக்கள் வெளியேற்றியுள்ளனர்.
இச்சம்பவம் தமக்கு பாரிய மன உழசை;சலைத் தந்துள்ளதோடு, தாம் சுமார் 40 வருடங்களாக பேணிப் பாதுகாத்து வந்த பயன்தரும் தென்னைகள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஒவ்வாரு இரவுப் பொழுதையும் தாம் காட்டு யானைகளுக்குப் பயந்து அச்சத்துடன் கழித்து வருவதாகவும் உரிய குடும்பஸ்த்தினர் தெரிவித்தானர்.
மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பகுதியிhன போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் யத்தம் நிறைவடைந்த பின்னர் தொடர்ந்து இவ்வாறு காட்டு யானைகளின் தாக்குகதல்களும், அட்டகாசங்களும் அதிகாரித்து வருகின்றன. அரசாங்க அதிகாரிகளும். அரசியல்வாதிகளும், இவற்றைக் கட்டுப்படுத்த பல்வேறுபட்ட பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றபோதிலும். அது இற்றைவரை அப்பகுதி மக்களுக்கு எட்டாக்கனியாகவே அமைந்துள்ளதாக அப்பகுதிவாழ் பொதுமக்கள் அங்கலாய்க்கின்றனர்.
0 Comments:
Post a Comment