4 Nov 2019

நாங்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழவேண்டும் - வசந்தராசா.

SHARE
நாங்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழவேண்டும் - வசந்தராசா.
நாங்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழவேண்டும். இந்த நாடு பல்லின மக்கள் வாழ்கின்ற நாடு இதற்குள் நாங்கள் அனைவரும் சகோதரத்துவத்துடனும், ஒற்றுமையுடனும் விட்டுக்கொடுப்புடனும் வாழவேண்டும். இதனை ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் பாடசாலை மட்டத்திலிருந்து மாணவர்களுடாக முன்கொண்டு செல்லவேண்டும். இவ்வாறு சமாதானக் கருத்துக்களை பாடசாலைப் பருவத்திலிருந்து முன்னெடுக்கப்படும் போதுதான் ஒவ்வொரு சமூதாயத்திலிருந்தும் எதிர்கால சிறந்த சமூகத்தை நாம் இந்த நாட்டில் உருவாக்க முடியும். என இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் த.வசந்தராசா தெரிவித்தார். 

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையினால் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட் ஆசிரியர்களுக்கு சமாதானமும் சமூக நல்லிணக்கமும் எனும் தொணிப்பொருளில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் காரியாலயத்தினல் திங்கட்கிழமை (04) ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்திச் செயலமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

பாடசாலைப் பருவத்தில் சமாதான எண்ணக்கருக்களையும், புரிந்துணர்வு விட்டுக் கொடுப்புக்களையும் மேற்கொண்டுவந்தால் எதிர்காலத்தில் சிறந்த சகவாழ்வான சமூகத்தை நாம் கட்டியெழுப்ப அது அத்திவாரமிட்டதாக அமைந்துவிடும். இதனை ஆசிரியர்களால் மாத்திரமே செய்யமுடியும். இதனைக்கருத்தில் கொண்டுதான் செஞ்சிலுவைச் சங்கத்தினராகிய நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து கல்வி வலையங்களையும் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சமாதானமும் சமூக நல்லிணக்கமும் எனும் தொணிப்பொருளில் வாண்மை விருத்தி செயலமர்வுகளை மேற்கொண்டு வருகின்றோம். என அவர் இதன்போது தெரிவித்தார்.

இதன்போது மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிதரன் வளவாளராகக் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு விளக்கங்களை எடுத்தியம்பினார்.

SHARE

Author: verified_user

0 Comments: